கடலுார்: இலங்கையிலிருந்து, மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க, கடலுார் மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நிகழும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, மர்ம நபர்கள் ஊடுரவலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது.அதையடுத்து, போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவும் கடலோர காவல் குழும போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, புதிய படகுகள் மற்றும் புதிய நபர்கள் யாரும் கடல் வழியாக ஊடுருவி வருகிறார்களா என, கண்காணித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement