கடலோர குழும போலீசார் கடல் பகுதியில் ரோந்து| Dinamalar

கடலோர குழும போலீசார் கடல் பகுதியில் ரோந்து

Added : மே 14, 2022 | |
கடலுார்: இலங்கையிலிருந்து, மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க, கடலுார் மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இலங்கையில் நிகழும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, மர்ம நபர்கள் ஊடுரவலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது.அதையடுத்து, போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவும் கடலோர காவல் குழும போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதியில்
 கடலோர குழும போலீசார் கடல் பகுதியில் ரோந்து

கடலுார்: இலங்கையிலிருந்து, மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்க, கடலுார் மாவட்ட கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் நிகழும் அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, மர்ம நபர்கள் ஊடுரவலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது.அதையடுத்து, போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவும் கடலோர காவல் குழும போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார், கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, புதிய படகுகள் மற்றும் புதிய நபர்கள் யாரும் கடல் வழியாக ஊடுருவி வருகிறார்களா என, கண்காணித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X