பொதுவாக வீடுகளில் அறைகளுக்கான குறுக்கு சுவர்கள் அரைக்கல் அமைப்பில் செங்கலால் தான் கட்டுவர். இச்சூழலில் அறைகளின் அளவீடுகள் அடிப்படையில் கட்டுமான முறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி அமைக்கப்படாத பல வீடுகள், சில ஆண்டுகளில் குறுக்கு சுவர் விரிசல்களால் பாதிக்கப்படும்.
பிரதான சுமை தாங்கும் சுவர்
கட்டட எடையை தாங்கும் 'லோடு பேரிங்' என்ற பிரதான சுவர்கள் தவிர பிற சுவர்களும் எடையை தாங்கும் திறனுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டுமான பொறியாளர்களின் கருத்து. பிரதான சுவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அரைக்கல் சுவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. பல நேரங்களில் குறுக்கு சுவர்கள் தரைப்பரப்பில் கான்கிரீட்டின் மேல்பகுதியில் சாதாரணமாக, செங்கல், காரை கொண்டு அமைக்கப்படுகிறது.மேற்கண்ட முறைப்படி சுவர் அமைக்கும் போது கான்கிரீட் பரப்பின் கீழ்ப்புறம் உள்ள மண் பகுதி காலப்போக்கில் இறுகிவிடும். அப்படி மண் இறுகும் போது அதற்கு மேற்பரப்பில் உள்ள சுவரும் கீழே இறங்கும் நிலையில் அதன் குறுக்கு வாக்கில் விரிசல் ஏற்படுகின்றன என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறுக்கு வசத்தில் சிறிய பீம்
காலம் செல்லச்செல்ல சுவர்களின் இறங்கும் அளவு அதிகரிப்பதால் விரிசல்களின் அளவு, ஆழமும் பெரிதாகும், எனவே, அரைக்கல் கொண்டு குறுக்கு சுவர் அமைக்கப்படும் போது அறை பக்கவாட்டில் உள்ள 'மெயின் பீம்களில்' இருந்து குறுக்கு வசத்தில் சிறிய 'பீம்' அமைத்து, அதன் மேல் குறுக்கு சுவர் அமைக்க வேண்டும். அப்படி கட்டமைத்தால் தான் குறுக்கு சுவர்களில் விரிசல் ஏற்படாது. எந்த சுவர் அமைத்தாலும் கான்கிரீட் கலவை, கட்டுமான கம்பி கொண்டு ஜன்னல்களில் சில் சிலாப் என்ற முறையில் அடித்தளம் அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் தான் ஜன்னல் கீழேயுள்ள சுவரில் விரிசல் விழாது. இதே போல் மொட்டை மாடி சுற்றுச்சுவர் அமைக்கும் போதும் அதற்கு மேலே வெறும் சிமென்ட் கொண்டு பூசாமல் சில் சிலாப் முறையில் பூசினால் அங்கும் வரிசல் விழுவது தடுக்கப்படும் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE