ராணிப்பேட்டை: சோளிங்கரில், தந்தைக்கு பதில் மகனிடம் விசாரணை நடத்திய எஸ்.ஐ., 2 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநெல்லுாரை சேர்ந்தவர் ஆறுமுகம், 55. அரிசி வியாபாரி. இவர் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1 ம் தேதி புகார் ஒன்று கொடுத்தார். அதில், சோளிங்கர் ஜோதிபுரத்தை சேர்ந்த நடராஜன், 40, என்பவர் என்னிடம் நெல் வாங்கிய வகையில் 25 ஆயிரம் ரூபாய் பாக்கி தர வேண்டும். பணம் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்துவதாக கூறினர்.
இந்நிலையில், ஆறுமுகத்திடம் விசாரிக்காமல், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி. இ., இறுதியாண்டு படித்து வரும் அவரது மகன் ஹரிகிருஷ்ணனை, 21, கடந்த 4 ம் தேதி சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து ஒரு நாள் முழுவதும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
இது குறித்து வந்த புகார்படி சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பசலைராஜ், போலீசார் சுந்தரபாண்டியன், பரத் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்த வடக்கு மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்காத சோளிங்கர் கனிப்பிரிவு எஸ்.ஐ., அண்ணாமலையை பணியிலிருந்து விடுவித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., தீபா சத்யன் உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement