வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த ராமநாயினிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 39. இவர் ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். நேற்று(மே 13) இரவு 6:00 மணிக்கு அவரது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அலுவலக கோப்புக்களை பார்ப்பதாக கூறி அவர் சென்றுள்ளார்.நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால், உறவினர்களுடன் அவர் மனைவி காந்திமதி, 29, கதவை உடைத்து பார்த்த போது, அங்கிருந்த மின் விசிறியில் ராஜசேகர் துாக்கிட்டு பிணமாக தொங்கினார்.
வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதி சட்டை பையில் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தை கைப்பற்றினர்.
கடிதத்தில், மனைவி காந்திமதி என்னை மன்னித்து விடு. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு போகிறேன். என் சாவுக்கு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், தி.மு.க., பிரமுகருமான அமுதா துரைசாமி ஆகிய இருவரும் தான் காரணம் என எழுதி வைத்திருந்தார்.
ராஜசேகரின் அண்ணன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில், வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ராஜசேகர் தம்பி மணிக்கு, ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி அணைக்கட்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஹரி என்பவர் 2.50 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு வேவேலை வாங்கித் தரவில்லை.கொடுத்த பணத்தை கேட்டதற்கு ஒன்றிய கவுன்சிலர் ஹரியும், அமுதா துரைசாமி ஆகியோர் ராஜசேகரை மிரட்டினர்.
ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சியில் அதிகளவு நிதி மோசடி நடந்ததாகவும், அதை தட்டிக் கேட்ட ஊராட்சி செயலாளர் ராஜசேகரை தீர்மானம் நிறைவேற்றி வேலையை விட்டு நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும், அப்போது தன் தம்பி வேலைக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தர மறுத்ததால் மனமுடைந்த ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE