முதல்வர் நியாயமாக நடக்கவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

Updated : மே 15, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (21)
Advertisement
சென்னை: சென்னை ஆர்ஏ புரம் குடியிருப்பு விவகாரத்தில் முதல்வர் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிம்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அகற்றினர். இதற்கு
அண்ணாமலை, பாஜ, ஆர்ஏபுரம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை ஆர்ஏ புரம் குடியிருப்பு விவகாரத்தில் முதல்வர் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிம்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையன் என்ற முதியவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


latest tamil news


பின்னர் அண்ணாமலை கூறியதாவது: ஒவ்வொரு மக்களுக்கும் பா.ஜ., துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று, தீர்வு காண முயற்சி செய்வோம். முதல்வர் நியாயமாக நடக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சென்னை ஆர்ஏ புரத்தில் வீடுகளை அவசர அவசரமாக வீடுகளை அகற்றியுள்ளனர். தமிழகத்தில் தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். திராவிட மாடல், தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடுவேன் என முதல்வர் கூறுகிறார். இங்கு அவர் தான் வசிக்கின்றனர். அவர்கள் வீட்டிற்கும் சென்றிருக்க வேண்டும். அவர்களுடன் பேசியிருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை ஏன் கேள்வி கேட்பது இல்லை. கார்பரேட், ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது. சாமானிய மக்களுக்கான ஆட்சி போல் தெரியவில்லை.ஆர்ஏ புரம் கட்டட விவகாரத்தில் முதல்வர் மாபெரும் தவறு செய்துள்ளார். இங்கிருக்கும் மக்களுக்கு தூரமான இடத்தில் டோக்கன் கொடுத்துள்ளனர். ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி தீர்வு காணவேண்டும். குடியிருப்பு விவகாரத்தில் முதல்வர் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. ஆர்ஏ புரத்தில் கட்டடம் இடிக்கப்பட்டது, உயிரிழந்தது, தீக்குளித்தது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
16-மே-202216:33:28 IST Report Abuse
vinu ....
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-மே-202221:13:44 IST Report Abuse
Matt P .. திராவிட மாடல், தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடுவேன் என முதல்வர் கூறுகிறார்...ஏன்பா அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறைகூறுகிறீர்கள். இன்னொருவர் வீட்டுக்கு சென்று சாப்பிடவேண்டுமானால், அங்கு போஇ சாப்பிட்டு கொண்டு வாருங்கள்.எல்லோரும் மனிதர்கள் தான். இன்றைக்கு முதலவர் உயர்த்தப்பட்டவர் ஆகிவிட்டாரா? ...ஆமா பணத்தால் பதவியால்.. இந்த தீக்குளிப்புக்கு முடிவே கிடையாதா? தமிழ்நாட்டில் பகுத்தறிவை ஏற்படுத்தினோம் என்று சொல்லி கொள்வார்கள். வேறு எங்காவது இந்த தீக்குளிப்பு இந்த அளவுக்கு நடக்கிறதா?. ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு குடும்பங்கள் மண்ணெணெய் கேன் , தீக்குச்சியை கொண்டு போகும் அவலம் எந்த நாட்டில் நடக்கிறது?மக்களுடைய குறைகளை களைய முயலும்போது மிக கவனமாக களைய முயலுங்கள். அறிவை விட் உயர்ந்த ஆயுதம் உலகத்தில் வேறு எதுவும் இல்லை. நான் சமீபத்தில் இங்கு சித்திரை திருவிழா என்று இங்குள்ள தமிழ் சங்கம் புத்தாண்டு நடத்தினார்கள். அங்கு சிலர் உணவும் கொண்டு வந்தார்கள். நான் தாழ்த்தப்பட்டவனா என்று யாரும் சந்தேகவில்லை. உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல பாவம் ...பாரதியாரின் மனதின் அடித்தளத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
14-மே-202221:00:58 IST Report Abuse
Ramesh Sargam ஆனால் முதல்வர் திமுகவினருக்கும், மற்றும் பல அல்லக்கைகளுக்கும் ரொம்பவும் நியாயமாக நடக்கிறார். இதை உங்களால் மறுக்கமுடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X