அறிவியல் ஆயிரம்
பழமையான விண்கல்
ஆஸ்திரேலியாவின் மேற்கில் யரபுபா என்ற இடத்தில் 69 கி.மீ., அகலத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. இது 200 கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம் என ஆய்வில் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இதுதான் உலகின் பழமையான விண்கல் எனவும் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பம் நானுாறு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது கிரகங்களாக உருவாகாமல் நின்றுபோன எச்சங்கள் தான் விண்கற்கள் என வானியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவை 20 அடி விட்டத்திலிருந்து, பல 100 கி.மீ., வரையிலான அளவுகளில் இருக்கின்றன
தகவல் சுரங்கம்
சர்வதேச குடும்ப தினம்
ஒவ்வொருவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் மே 15ல் சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது. 'குடும்பங்கள் மற்றும் நகரமயமாக்கல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2015ன்படி உலகில் 96 சதவீத நாடுகளில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE