சென்னைக்கு என்.எல்.சி., மின்சாரம் ரூ.550 கோடியில் துணைமின் நிலையம்

Added : மே 14, 2022
Advertisement
சென்னை:என்.எல்.சி., மின் நிலைய மின்சாரத்தை சென்னைக்கு எடுத்து வரவும், டெல்டா மாவட்டங்களில் தடையின்றி வினியோகிக்கவும், மின் வாரியம் கடலுாரில் 550 கோடி ரூபாய் செலவில், 400 கிலோ வோல்ட் திறனில் புதிய துணைமின் நிலையம் அமைக்க உள்ளது.கடலுார் மாவட்டம், நெய்வேலியில், மத்திய அரசின் என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில்

சென்னை:என்.எல்.சி., மின் நிலைய மின்சாரத்தை சென்னைக்கு எடுத்து வரவும், டெல்டா மாவட்டங்களில் தடையின்றி வினியோகிக்கவும், மின் வாரியம் கடலுாரில் 550 கோடி ரூபாய் செலவில், 400 கிலோ வோல்ட் திறனில் புதிய துணைமின் நிலையம் அமைக்க உள்ளது.


கடலுார் மாவட்டம், நெய்வேலியில், மத்திய அரசின் என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,769 மெகா வாட் ஒதுக்கப்பட்டு உள்ளது.அந்த மின்சாரத்தின் பெரும்பகுதி, கடலுாரில் உள்ள மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவன துணைமின் நிலையத்திற்கு எடுத்து சென்று, சேலம் மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள மின் வாரிய துணைமின் நிலையங்கள் வாயிலாக, வினியோகம் செய்யப்படுகிறது.
என்.எல்.சி., மின்சாரம், 300 மெகா வாட் அளவுக்கு, கடலுாரில் உள்ள மின் வாரியத்தின், 230 கி.வோ., துணைமின் நிலையம் வாயிலாக விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.
கடலுார் 230 கி.வோ., துணைமின் நிலையம்; சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகில் உள்ள வீராபுரம், 230 கி.வோ., துணைமின் நிலையத்துடன், அதே திறன் மின் வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.கடலுார் துணைமின் நிலையத்தில் என்.எல்.சி., மின்சாரம் குறைந்த அளவே பெறப்படுவதால், அங்கிருந்து வீராபுரம் மின் நிலையத்திற்கு எடுத்து வரப்படுவதில்லை. டெல்டா மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்யும் போது மின்னழுத்த பிரச்னையும் ஏற்படுகிறது.
எனவே, கடலுாரில் புதிதாக, 550 கோடி ரூபாய் செலவில், 400 கி.வோ., திறனில் நவீன துணைமின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த துணைமின் நிலையம், 1,000 மெகா வாட் மின்சாரம் கையாளும் திறன் உடையது.இதன் வாயிலாக, என்.எல்.சி.,யில் இருந்து அதிக மின்சாரத்தை பெற முடியும். இதன் வாயிலாக, டெல்டா மாவட்டங்களுக்கு மின்னழுத்த பிரச்னை இன்றி சீராக வினியோகம் செய்ய முடியும்.
இதுதவிர, கடலுாரில் இருந்து வீராபுரம் துணை மின் நிலையத்திற்கு, 200 மெகா வாட் மின்சாரம் எடுத்து வந்து, சென்னைக்கு வினியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.கடலுார் 400 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு விரைவில் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, கட்டுமான பணிக்கான நிறுவனத்தை தேர்வு செய்ய மின் வாரியம், 'டெண்டர்' கோர உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X