மணிமண்டபங்களில் முதல்வர் ஆய்வு

Added : மே 14, 2022
Advertisement
சென்னை:சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அம்பேத்கர் மணிமண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.சென்னை, ராஜா அண்ணா மலை புரத்தில், நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைந்துள்ளது. மணிமண்டபம் உள்ளே, 8 அடி உயரமுள்ள சிவாஜியின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் அமைக்கும்படி, சிவாஜி குடும்பத்தினர் கோரிக்கை

சென்னை:சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அம்பேத்கர் மணிமண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை, ராஜா அண்ணா மலை புரத்தில், நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைந்துள்ளது. மணிமண்டபம் உள்ளே, 8 அடி உயரமுள்ள சிவாஜியின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் அமைக்கும்படி, சிவாஜி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, வெளிப்புறத்தில் அவரது சிலையை நிறுவுவதற்கான இடத்தை, நேற்று காலை முதல்வர் ஆய்வு செய்தார். அதன்பின், அதே பகுதியில் அமைந்துள்ள, அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்றார். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கியுள்ள, அம்பேத்கர் முழு உருவ சிலையை நிறுவுவதற்கான இடத்தையும், முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X