மதுரை:'ஆவின் நிறுவனத்திற்கு தேவையற்ற இயந்திரங்களை கொள்முதல் செய்ததில், 18 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுச்சாமி கூறியதாவது:ஆவினுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன.கோவை ஆவினில், 2.5 கோடி ரூபாய், மதுரையில் 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட 'சோலார்' இயந்திரங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன.
அதிகாரிகள் 'கமிஷன்'வாயிலாக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, இதுபோல் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.தி.மு.க., ஆட்சியிலும் இதே நிலை நீடிக்கிறது. 18 ஆவின் ஒன்றியங்களின் பால் பண்ணைகளுக்கு கொழுப்பு சத்து, திடச்சத்து, கலப்படத்தை பகுப்பாய்வு செய்யும் 'மில்க் அனலைசர்' இயந்திரங்கள், 18 கோடி ரூபாய்க்கு அவசர கதியில் வாங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, அனைத்து ஒன்றியங்களிலும் 'மில்கோ ஸ்கீமர்' அல்லது 'மில்கோ ஸ்கேனர்' இயந்திரங்கள் இருக்கும் போது, புதிதாக வாங்க வேண்டிய அவசியம் ஏன்?அ.தி.மு.க., ஆட்சியில் தேவையற்ற இயந்திரங்களை வாங்கி கிடப்பில் போட்ட விவகாரத்தில், அப்போதைய பொது மேலாளர் ஒருவரும், ஆவின் இணையத்தில், 'பிளானிங்' பிரிவில் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது.
தற்போதும் அவர்களின் தவறான வழிகாட்டுதலால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.எனவே, ஆவின் இணையம், ஒன்றியங்களுக்கு தேவையின்றி நிதிச்சுமையை ஏற்படுத்திய அதிகாரிகளை கூண்டோடு பணி நீக்கம் செய்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement