ராணுவத்தினர் மொபைல் எண்களை 'ப்ளாக்' செய்து விட்டேன்: இம்ரான் கான்

Added : மே 14, 2022
Advertisement
இஸ்லாமாபாத்:'பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் 'மொபைல் போன்' அழைப்புகளை ஏற்கப் பிடிக்காமல் அந்த எண்களை, 'ப்ளாக்' செய்து விட்டேன்' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.நம் அண்டை நாடான பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் பார்லியில் வெற்றி பெற்றதை அடுத்து, இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து

இஸ்லாமாபாத்:'பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் 'மொபைல் போன்' அழைப்புகளை ஏற்கப் பிடிக்காமல் அந்த எண்களை, 'ப்ளாக்' செய்து விட்டேன்' என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.
நம் அண்டை நாடான பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் பார்லியில் வெற்றி பெற்றதை அடுத்து, இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தலைமையில் எதிர்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது.இந்நிலையில் இம்ரான்கான் கூறியதாவது:
என் ஆட்சி கவிழ அமெரிக்கா தான் காரணம். இந்த சதி குறித்து எனக்கு ஓராண்டுக்கு முன்னரே தெரியும். ஆட்சி கவிழ துணை நின்றவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் பற்றி அக்கறைஇல்லை. கிரிமினல்களை ஆட்சியில் அமர்த்தியதை விட, அவர்கள் பாக்., மீது அணுகுண்டு போட்டிருக்கலாம். என் ஆட்சியின் கடைசி நாள் வரை, இரு விஷயங்கள் தவிர, ராணுவத்துடன் எனக்கு நல்லுறவு இருந்தது.

பஞ்சாப் மாகாண முதல்வரை நீக்கவும், உளவு அமைப்பின் தலைவர் நியமனத்திலும் எனக்கு ராணுவ தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இப்போது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதால் என்னுடன் பேச ராணுவத்தில் இருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் அந்த மொபைல் எண்களை 'ப்ளாக்' செய்து விட்டேன். பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை யாருடனும் பேச தயாராக இல்லை. அரசை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X