இலங்கைக்கு 'யூரியா' வழங்க முடிவு

Added : மே 14, 2022
Advertisement
புதுடில்லி:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, 'யூரியா'வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை

புதுடில்லி:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ, 'யூரியா'வை வழங்கி உதவ, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி, மத்திய அரசு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய உரத் துறை செயலர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை, இந்தியாவுக்கான இலங்கை துாதர் மிலிண்டா மோரகோடா சந்தித்துப் பேசினார்.இலங்கையில், நெல் சாகுபடி காலம் துவங்கி இருப்பதால், அதற்கு தேவையான யூரியாவை வழங்கி உதவக்கோரி மிலிண்டா கோரிக்கை வைத்தார்.அவரின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு, 6.5 கோடி கிலோ யூரியாவை உடனடியாக அனுப்பி வைக்க, ராஜேஷ் குமார் சம்மதம் தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X