பியாங்யாங்:வடகொரியாவில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வேகமாக பரவி வருவதாக, ௧௧ம் தேதி அறிவிக்கப்பட்டது. பலர், 'ஒமைக்ரான்' வகை வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அங்கு, 12ம் தேதி, காய்ச்சல் அறிகுறிகளால் ஆறு பேர் இறந்தனர். அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வடகொரியாவில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு, ௧ லட்சத்து ௭௪ ஆயிரத்து ௪௪௦ பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில்,21 பேர் இறந்தனர்.
இதையடுத்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24ஆயிரத்து 440ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், இறந்தவர்கள் எண்ணிக்கையையும், வட கொரியா அரசு வெளியிடவில்லை. அதனால், இறந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement