டில்லி 'உஷ்ஷ்ஷ்...' : மதம் மாற்றம்- பற்றி கவர்னர் 'ரிப்போர்ட்'

Updated : மே 15, 2022 | Added : மே 14, 2022
Advertisement
பட்டினப் பிரவேசம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு அதிரடி காரியத்தை செய்ததாக டில்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளாராம். தமிழகத்தில் மதம் சம்பந்தமாக நடைபெற்று வரும் பல பிரச்னைகளை, அந்த ரகசிய 'ரிப்போர்ட்'டில் அமித் ஷாவிற்கு

பட்டினப் பிரவேசம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு அதிரடி காரியத்தை செய்ததாக டில்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளாராம். தமிழகத்தில் மதம் சம்பந்தமாக நடைபெற்று வரும் பல பிரச்னைகளை, அந்த ரகசிய 'ரிப்போர்ட்'டில் அமித் ஷாவிற்கு தெரிவித்துள்ளாராம்.தன் அறிக்கையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றதை குறிப்பிட்டுள்ள கவர்னர், 'பல கோவில்களுக்கு சென்றுள்ளேன்; பல சமய தலைவர்களையும் சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து பல புகார்கள் எனக்கு வந்துள்ளன.'தமிழக அரசு ஹிந்து மத தலைவர்களையும், அவர்களது சம்பிரதாயங்களையும் மதிப்பதில்லை. தேவையில்லாமல் அரசு தலையிடுகிறது என இந்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்' என சொல்லி இருக்கிறாராம்.

அதோடு, 'தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கட்டாய மத மாற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. 'இது குறித்து தலைமைச் செயலரிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை' எனவும் கவர்னர், தன் அறிக்கையில் குறிப்பிட்டுஉள்ளாராம்.இது குறித்து, மத்திய அரசு விரைவில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


பட்டின பிரவேசத்தில்எதற்கு வீண் வம்பு?


தருமபுரம் ஆதீனம் நடத்தும் பட்டினப் பிரவேசம் இதுவரை வெளியே பரவலாக தெரியாமல் இருந்தது. ஆனால், தமிழக அரசின் நடவடிக்கையால் இப்போது பிரபலமாகி விட்டது. வட மாநிலங்களிலும் இதைப் பற்றி அதிக அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன.ஹிந்தி, குஜராத்தி, மராத்தி என பல வட மாநில 'டிவி' சேனல்களில், பட்டினப் பிரவேசம் என்றால் என்ன, தருமபுரம் ஆதீனம் எங்குள்ளது,

அதனுடைய பாரம்பரியம் என்ன, என செய்திகளும், விவாதங்களும் நடந்தன.தமிழக அரசு ஏன் மத விவகாரங்களில் தலையிடுகிறது என குறிப்பிட்டு வட மாநில சேனல்களில் நடைபெற்ற பெரிய விவாதத்தைத் தொடர்ந்து, ஆங்கில சேனல்களும் இதை பெரிதாக்கின.அகில இந்திய அளவில் ஒரு தலைவராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கும் ஸ்டாலின் ஏன் இப்படி செய்கிறார் என, சிவசேனா உட்பட சில கூட்டணி கட்சிகள், தி.மு.க., - எம்.பி.,க்களிடம் கேட்டு உள்ளன.
இந்த செய்திகள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ளன. 'வட மாநிலங்களைப் பொறுத்தவரை ஹிந்து மதத்தை யார் எதிர்த்தாலும் அவர்கள் வில்லனாக பார்க்கப்படுவர். அது, பா.ஜ.,விற்கு சாதகமாக இருக்கும்' என கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், தி.மு.க., - எம்.பி.,க்களிடம் சொன்னார்களாம்.


அசோக் கெலாட் காங்., பிரதமர் வேட்பாளர்?


தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. காங்கிரசை பலப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து, கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை கேட்கவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.இந்த மாநாடு முடிந்ததும், காங்., இடைக்கால தலைவர் சோனியா பல முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார்.

இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், காங்கிரசின் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தவிர, காங்., காரியக் கமிட்டி உறுப்பினர்களும் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர். இதுவரை காங்., தலைவர் தான், இந்த உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார்.காங்கிரசின் செயல் தலைவராக ஒருவரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இது, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையாம்.
இந்த பதவிக்கு கமல்நாத் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். எனவே, அடுத்த சீனியராக இருக்கும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இவர், சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அடுத்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு, காங்கிரசில் ஏற்கனவே கோஷ்டி பூசல் உள்ளது. இம்மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வராக விரும்புகிறார். கெலாட் கட்சியின் செயல் தலைவரானால், சச்சின் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்கின்றனர் கட்சியின் சீனியர் தலைவர்கள்.
இன்னொரு விஷயமும் காங்., வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராகுல் எந்தவித பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வரும் நிலையில், அவர் காங்., தலைவராக ஆவாரா என கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு வேளை கட்சித் தலைவரானாலும், 2024 லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாள ராக ராகுல் போட்டியிடுவாரா என்பதும் சந்தேகம் தான் என்கின்றனர் கட்சி தலைவர்கள்.
இதனால், அசோக் கெலாட் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவரை காங்கிரசில் மட்டுமல்லாது, மற்ற எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் என சோனியா நம்புகிறாராம்.


இடதுசாரிகள் தனி ஆவர்த்தனம்?


தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சி, டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பிஉள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அறிக்கையில், 'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், மக்களிடையே தி.மு.க.,விற்கு எதிரான போக்கு காணப்படுகிறது. ஊழல் புகார்களும் வெளிவர ஆரம்பித்துவிட்டன. அதோடு சட்டம் - ஒழுங்கு நிலையும் மோசமாக உள்ளது.

'குறிப்பாக, 'லாக் -அப்' சாவுகள் அதிகமாகி விட்டன' என சொல்லப்பட்டுஉள்ளதாம்.இந்த அறிக்கையைப் படித்ததும், தமிழகத்தில் தங்கள் கட்சியினர் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து கொண்டாராம் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி. உடனே அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டாராம்.தமிழக மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றி ஸ்டாலினிடம் சொன்னாராம். நீங்கள் சொன்னவற்றை நிச்சயம் கவனிக்கிறேன் என, ஸ்டாலின் பதில் அளித்தாராம்.
மக்களுக்கு எதிரான நடவடிக்கை களை கடுமையாக விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., சீனியர் தலைவர்கள் தி.மு.க., அரசு விஷயத்தில் வாய் மூடி மவுனமாக இருக்கின்றனர். இப்படி இருந்தால் மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்த அறிக்கையை, தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ தலைவர்கள், மத்திய தலைமைக்கு அனுப்பி வைத்தனராம். ஆனால், யெச்சூரியோ ஒரு போன் போட்டு விவகாரத்தை மூடிவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X