சென்னை:வீடுகளில் ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை மேற்கொள்ள, தேவையான தொழில்நுட்ப விபரங்களை அளிக்கும் பணியை, தமிழக தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம், மின் வாரியம் வழங்கியுள்ளது.
தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். சிலர் குறித்த காலத்தில் கணக்கு எடுப்பதில்லை. இதனால், அதிக கட்டணம் வருவதால், நுகர்வோர்கள் பாதிக்கின்றனர். மத்திய அரசின் உத்தரவுப்படி, டில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில மின் வாரியங்கள், ஆளில்லாமல்மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.
அந்த மீட்டரில் மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் தேதி, மென்பொருள்வடிவில் பதிவேற்றம் செய்து, தொலைதொடர்புவசதியுடன், அலுவலக,'சர்வர்' உடன் இணைக்கப்படும். குறிப்பிட்ட தேதி வந்ததும், தானாகவே கணக்கு எடுத்து நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பப்படும்.இதனால், முறைகேடு இல்லாமல் துல்லியமாக கணக்கு எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் சோதனை ரீதியாக சென்னை, தி.நகரில், 1.42 லட்சம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இன்னும், அந்த இணைப்புகளில் முழுவதுமாக ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படவில்லை.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்திட்டத்தை விரைந்து துவக்கும்பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, அத்திட்டத்தை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப அறிக்கை தயாரித்து வழங்கும் பணியை, மின் வாரியம், தமிழக தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.அந்நிறுவனம், இரு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், 2.30 கோடி வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளை, மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
'மொபைல் ஆப்'@
@
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது, தனி மொபைல் போன் செயலியும் அறிமுகப் படுத்தப்படும். நுகர்வோர்கள், செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த செயலிக்கு மின் பயன்பாடு, மின் கட்டணம் அனுப்பப்படும்.மின் கட்டணம் செலுத்தவில்லை எனில், வினியோகம் தானாகவே துண்டிக்கப்படும். இந்த பணி முழுதும் கணினியில் ஒருங்கிணைக்கப்படும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement