சித்தி:மத்திய பிரதேசத்தில் தாய்மாமன் தலையை வெட்டி அதை ஒரு கையிலும், வெட்டிய கோடாலியை இன்னொரு கையிலும் வைத்து ஊர் சுற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சித்தி மாவட்டம், கரிமட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தன் கஷ்டங்களுக்கு தாய்மாமன் செய்த பில்லி, சூனியம்தான் காரணம் எனக் கூறி அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் தாய் மாமன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அங்கிருந்த கோடாலியை எடுத்து தாய்மாமன் கழுத்தை வெட்டியுள்ளார். ரத்தம் சொட்டிய தலையை ஒரு கையிலும், இன்னொரு கையில் கோடாலியையும் வைத்தபடி, 2 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அச்சத்தில் அலறி ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE