தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை: ஏற்காட்டில் மண் சரிவு

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (2)
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலைப்பகுதியில் நிலச்சரிவுசேலம்மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



latest tamil news




ஏற்காடு மலைப்பகுதியில் நிலச்சரிவு



சேலம்மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் 10 -வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கோரிமேடு வழியாக செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news




இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
14-மே-202221:42:31 IST Report Abuse
Ramesh Sargam தமிழக மக்களே, உங்களுக்கு போன வருடம் பெய்த மழையின் சீற்றத்தின் வலி என்னவென்று தெரிந்திருக்கும். ஆகையால், இந்த வருடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். அரசு, எப்பொழுதும்போல், முன்னெச்சரிக்கையாக எதுவும் செய்யாது. ஆனால், மழை ஓய்ந்தவுடன், மத்திய அரசிடம் நிவாரணம் என்று கையேந்தும். சரி ஏந்தட்டும். அட கிடைக்கும் நிவாரணத்தை முறையாக பயன்படுத்துமா? ஹூ ஹூம். இல்லை, அதில் முக்கால்வாசி ஆட்டை போட்டுவிட்டு, ஒப்புக்கு மழை நீரில் ஒரு போட்டோ சூட் செய்து, ஒரு சிறிய தொகையை 'நிவாரணம்' என்று கொடுத்து கையெடுத்து விடுவார்கள். இதெல்லாம் சகஜம். ஆகையால், மக்களே, மீண்டும் கூறுகிறேன், நீங்களாவது இந்த மழை காலத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
14-மே-202221:36:57 IST Report Abuse
Balaji பெண்ணையாறு திருவண்ணாமலைக்கு மேல் கடலில் கலக்கும் வரை காய்ந்து மண்ணடித்து கிடக்கிறது.. இதில் என்ன வெல்லாம்.. பாதை இருந்தால் தானாக ஓடி வெள்ளம் வழிந்துவிடும்... தெய்வமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X