இதே நாளில் அன்று

Added : மே 14, 2022 | |
Advertisement
மே 15, 1922டி.கே.ராமமூர்த்தி என்ற, திருச்சி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி, 1922ல், இதே நாளில் பிறந்தார். இவரின் தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும், அப்பா கிருஷ்ணசாமியும் இசை கலைஞர்கள். அவர்களுடன் சிறு வயதிலேயே ராமமூர்த்தியும் வயலின் வாசித்தார். இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன், இவரை எச்.எம்.வி., நிறுவனத்தில் சேர்த்து விட்டார். பின், ராமமூர்த்தியே ஏ.வி.எம்., நிறுவனத்தில்

இதே நாளில் அன்று


மே 15, 1922



டி.கே.ராமமூர்த்தி என்ற, திருச்சி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி, 1922ல், இதே நாளில் பிறந்தார். இவரின் தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும், அப்பா கிருஷ்ணசாமியும் இசை கலைஞர்கள். அவர்களுடன் சிறு வயதிலேயே ராமமூர்த்தியும் வயலின் வாசித்தார். இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன், இவரை எச்.எம்.வி., நிறுவனத்தில் சேர்த்து விட்டார். பின், ராமமூர்த்தியே
ஏ.வி.எம்., நிறுவனத்தில் சேர்ந்தார்.சி.ஆர்.சுப்புராமன், 1952ல் இறந்தார். அவர் இசையமைத்து பாதியில் நின்ற திரைப்படங்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து, பின்னணி இசை அமைத்தார் ராமமூர்த்தி. தன், பணம் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை, அவர்களுக்கு வழங்கி, 'விஸ்வநாதன் -ராமமூர்த்தி' என்று அறிமுகம் செய்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அவர்கள் இருவரும், 1953 முதல் 1966 வரை நுாற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தனர். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பின் பிரிந்த ராமமூர்த்தி, சாது மிரண்டால், தேன் மழை உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியே இசையமைத்தார்.
தன் வயலினால் ரசிகர்களை கட்டிப்போட்ட ராமமூர்த்தி, 2013 ஏப்ரல் 17ல், தன் 90வது வயதில் காலமானார். திரை இசை சக்கரவர்த்தியின் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X