புதுடில்லி:நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த வாலிபர், டில்லி நட்சத்திர ஹோட்டலில் போலீசாரிடம் சிக்கினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பர்கான் தசீர்கானுக்கு, 35, திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், தன் தாய்க்கு ஏற்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்து கடனாளி ஆனார்.இதனால் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு, திருமண இணையதளத்தில் விளம்பரம் செய்தார். அதில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இன்ஜினியர் என்று தன்னை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த பல பெண்கள் தசீர்கானை தொடர்பு கொண்டனர்.அவர்களைச் சந்திக்க, விலை உயர்ந்த காரில், டிப் - டாப்பாக உடையணிந்து சென்றுள்ளார். அவரது தோரணையை பார்த்து ஏமாந்த பெண்களிடம் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனக்கூறி, பணம் கறந்துள்ளார். இப்படி, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஒடிசா டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.
இவரிடம் சிக்கி 15 லட்சம் ரூபாயை இழந்த டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர், டில்லி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, டில்லியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தசீர்கானை கைது செய்தனர். விசாரணையில் 100க்கும் மேற்பட்ட பெண்களிடம், கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதை ஒப்புக் கொண்டார்.அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ., கார், விலை உயர்ந்த மொபைல் போன், ஒன்பது ஏ.டி.எம்., கார்டுகள், விலை உயர்ந்த வாட்சுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement