மலப்புரம்:பணிக்காலத்தில் மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருமான சசிகுமாரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் சசிகுமார். பின், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற இவர், சமூக வலைதளத்தில் அதை பதிவிட்டார். அவருடைய நண்பர்கள் மற்றும் கட்சியினர் பலர் சசிகுமாருக்கு சமூக வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதில், மாணவர் ஒருவர், சசிகுமார் ஆசிரியர் பணியில் இருந்த போது பல மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சியான தகவலை பதிவிட்டார்.
அது, காட்டுத்தீ போல பரவியது. இது குறித்து விசாரிக்க கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டார். விசாரணையில், சசிகுமார் பள்ளியில் பணிபுரிந்த போது, 60க்கும் மேற்பட்ட மாணவியரை பலாத்காரம் செய்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மலப்புரம் போலீசார் சசிகுமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியர் ஒவ்வொருவராக புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர். இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியில் இருந்து சசிகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement