தமிழக சூரியசக்தி மின் உற்பத்தி 5,000 மெகா வாட்டை தாண்டியது

Updated : மே 15, 2022 | Added : மே 14, 2022
Advertisement
சென்னை: தமிழகத்தில் பெரியது, சிறியது என, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி திறன், 5,000 மெகா வாட்டை தாண்டியது.மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைவரையும் அறிவுறுத்தி வருவதுடன், அந்த மின் நிலையம் அமைக்க மானியமும் வழங்குகிறது.தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் பெரியது, சிறியது என, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி திறன், 5,000 மெகா வாட்டை தாண்டியது.



மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைவரையும் அறிவுறுத்தி வருவதுடன், அந்த மின் நிலையம் அமைக்க மானியமும் வழங்குகிறது.தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான வானிலை நிலவுகிறது.

இதனால், பெரிய நிறுவனங்கள், தங்களிடம் உள்ள நிலத்தில், 1 மெகா வாட்டிற்கு மேலான திறன் உடைய சூரியசக்தி மின் நிலையத்தை அமைத்து, அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின் வாரியத்திற்கு விற்கின்றன.இது தவிர வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை கட்டடங்களின் மேல், குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன.

அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை வாரியத்திற்கு விற்கலாம்.விவசாய மின் இணைப்பு இல்லாத நிலங்களில், வேளாண் துறை உதவியுடன், குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து மழை தவிர்த்த மற்ற நாட்களில், வாரியம் தினமும் சராசரியாக, 2,500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்கிறது.

எப்போதும் இல்லாத வகையில், நடப்பாண்டு மார்ச் 1ம் தேதி மதியம், 1:30 மணிக்கு 3,602 மெகா வாட் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டில் மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரியசக்தி நிலையங்களின் மொத்த உற்பத்தித் திறனை, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 5,000 மெகா வாட்டை தாண்டி, 5,067 மெகா வாட் என்றளவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதலிடம்!

நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறனில், 12 ஆயிரத்து 564 மெகா வாட் உற்பத்தி செய்து, ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது; 7,590 மெகா வாட் உற்பத்தி செய்யும் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 7,180 மெகா வாட் உற்பத்தியுடன் குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன.நான்காவது இடத்தில் தமிழகமும், ஐந்தாவது இடத்தில் தெலுங்கானாவும் உள்ளன. நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தி திறனில், 12 ஆயிரத்து 564 மெகா வாட் உற்பத்தி செய்து, ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது; 7,590 மெகா வாட் உற்பத்தி செய்யும் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 7,180 மெகா வாட் உற்பத்தியுடன் குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் தமிழகமும், ஐந்தாவது இடத்தில் தெலுங்கானாவும் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X