சென்னை:ரேஷன் கடை செலவினங்களை சமாளிக்க தரப்படும் கமிஷன் தொகையில், சிறிய சங்கங்களுக்கு, 40 சதவீதம் வழங்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
பெரிய கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பல்பொருள் அங்காடி, மருந்தகம் போன்றவை நடத்தப்படுகின்றன. இது தவிர, ஒவ்வொரு பகுதியிலும் சிறிய கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அவை, ரேஷன் கடைகளை நடத்துகின்றன. பெரிய சங்கங்கள், முதன்மை சங்கம் என்றும்; சிறிய சங்கங்கள், இணைப்பு சங்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.
கிடங்குகளில் இருந்து பெரிய சங்கங்கள், அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக பெற்று, சிறிய சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கின்றன. ரேஷன் பொருட்களை வழங்க ஏற்படும் செலவுக்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு கமிஷன் தொகை வழங்குகிறது. இது, விளிம்பு தொகை என்று அழைக்கப்படுகிறது.அதன்படி, 100 கிலோ எடை உடைய அரிசி, கோதுமை, துவரம் பருப்புக்கு தலா, 107 ரூபாயும், சர்க்கரைக்கு, 30 ரூபாயும், 100 லிட்டர் பாமாயிலுக்கு, 107 ரூபாயும் கமிஷனாக வழங்கப்படுகிறது.
பெரிய சங்கங்கள் கமிஷன் தொகையை மொத்தமாக பெற்று, சிறிய சங்கங்களுக்கு தராமல் இருப்பதுடன், மிக குறைவாக வழங்குவதாக புகார்கள் எழுந்தன. இதனால், சிறிய சங்கங்கள் செலவினங்களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றன.இதையடுத்து, மொத்த கமிஷன் தொகையில் பெரிய சங்கங்களுக்கு, 60 சதவீதம், இணைப்பு சங்கங்களுக்கு, 40 சதவீதம் என்று பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement