வழக்குகள் தேக்கத்தை குறைக்க தலைமை நீதிபதி அறிவுரை

Updated : மே 14, 2022 | Added : மே 14, 2022 | கருத்துகள் (4)
Advertisement
ஸ்ரீநகர் ;''வழக்குகள் தேங்குவதை குறைக்க, மனுதாரர்களிடம் பிரச்னைக்கு மாற்று வழியில் தீர்வு காண, மாவட்ட நீதிமன்றங்கள் வலியுறுத்த வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், உயர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அடிக்கல்லை நாட்டி, ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா
வழக்குகள் தேக்கம், குறைக்க, நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர் ;''வழக்குகள் தேங்குவதை குறைக்க, மனுதாரர்களிடம் பிரச்னைக்கு மாற்று வழியில் தீர்வு காண, மாவட்ட நீதிமன்றங்கள் வலியுறுத்த வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை
நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், உயர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அடிக்கல்லை நாட்டி, ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது பெரும் சுமையாக உள்ளது. வழக்குகள் தேக்கத்தை குறைக்க வேண்டும். இதில், மாவட்ட நீதிமன்றங்களுக்கு தான்


latest tamil news



முக்கிய பங்கு உள்ளது. ஏனெனில், மக்கள் பலரும், முதலில் மாவட்ட நீதிமன்றங்களில் தான் மனு தாக்கல் செய்கின்றனர். எனவே, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர்களிடம் பேசி, பிரச்னைக்கு சட்டப்பூர்வமான மாற்று வழிகளில் தீர்வு காண வலியுறுத்த வேண்டும்.

மனுதாரர்களுக்கு பணப் பிரச்னைகளும் இருக்கும். அதனால், அவர்களிடம் பேசி, மாற்று வழியில் பிரச்னைகளுக்கு தீர்வு காண வைப்பது எளிது.அப்படி செய்தால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது பெருமளவில் குறையும். வழக்குகள் தேங்குவதால் நீதி வழங்குவதும் தாமதமாகிறது. தாமதப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி, சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பது உண்மை.

சிறப்பான நீதி வழங்குவதில், வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்.நீதி வழங்குவதில், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.இவ்வாறு ரமணா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-மே-202202:31:17 IST Report Abuse
BASKAR TETCHANA வழக்குகள் குறைக்க பட வேண்டும் என்றால் மூன்று வருடங்களுக்கு மேல் உள்ள வழக்குகளுக்கு சில நீதிபதிகள் வக்கீல்களுடன் கலந்து பேசி லஞ்சம் வாங்காமல் வாய்தா கொடுக்காமல் இருந்தால் வழக்குகள் குறையும். எங்கே அப்படி நடக்கிறது. நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க மறுக்கின்றனர். அதனால் தான் வழக்குகள் குட்டையில் தேங்கி கிடைக்கும் தண்ணீரை போல் தேங்கி கிடக்கின்றன.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
14-மே-202222:48:59 IST Report Abuse
Ramesh Sargam மாற்று வழி - அப்படி என்றால் 'கட்டபஞ்சாயத்து' தான் ஒரே தீர்வு.
Rate this:
Cancel
14-மே-202222:32:32 IST Report Abuse
ஆரூர் ரங் தள்ளுபடி ஆகிவிடுமெனத் தெரிந்தும் கட்சிகாரருக்கு போலி வாக்குறுதி🤑 கொடுத்து கேசை நடத்த வேண்டியது. பின்னர் வாய்தா மேல் வாய்தா வாங்கி அதற்கு ஃபீஸ் வாங்கிட்டு கட்சிக்காரர்களே வேண்டாமென்று சொல்லி ஒடவைப்பது🤧 . மீறினால் எதிர்த்தரப்பு வக்கீலுடன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்து கொண்டு இரு பக்கமும் காசைக் கறந்த பின் சமாதானமாக போகச் சொல்லி😝 கட்டப்பஞ்சாயத்து. . கனம் நீதிபதி அவர்களே இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X