சென்னை;இலங்கைக்கு அனுப்புவதற்காக, கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களை, அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.
இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசின் சார்பில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. இதற்காக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் அரிசி, சென்னை மாதவரம் பால் பண்ணையில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு அரிசி தரம் ஆய்வு செய்யப்படுகிறது.
பின், அந்த அரிசி, கப்பல் வாயிலாக இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் அரசு உயரதிகாரிகள், மாதவரம் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களை, நேற்று ஆய்வு செய்தனர்.பின், சக்கரபாணி கூறும் போது, ''தமிழக அரசின் சார்பில், இலங்கைக்கு, 4 கோடி கிலோ அரிசி, பால் பவுடர் போன்ற உணவு பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக, 1 கோடி கிலோ அரிசி அனுப்பப்பட்டு வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE