'தமிழ், மலையாளம், ஹாலிவுட் என 600க்கும் மேற்பட்ட நம் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலித்த படங்களை மீட்டெடுத்துள்ளோம்' என கூறியுள்ள பிரசாத் குழுமம், மலையாளத்தில் வெளியாகி, பல்வேறு விருதுகளை குவித்த தம்பு படத்தையும் மீட்டெடுத்து உள்ளது. இப்படம், 'கேன்ஸ்' சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது.
பிரான்சின் கேன்ஸ் நகரில் வரும் 17ம் தேதி துவங்கும் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா, 28ம் தேதி முடிகிறது. இதில் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது. மேலும் தம்பு மலையாளப் படமும் திரையிடப்படுகிறது.]\
அரவிந்தன் இயக்கத்தில், 1978ல் வெளியான இப்படத்தில் நெடுமுடி வேணு, பரத் கோபி, ஜலஜா உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம், கேரளாவின் சிறந்த இயக்குனர், சிறந்த மலையாளப் படம் மற்றும் தேசிய விருதையும் பெற்றுள்ளது. தம்பு படத்தை சென்னை வடபழநியில் உள்ள பிரசாத் குழுமம், அதன் ஒரிஜினல் மாறாமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்டெடுத்துஉள்ளது.தம்பு படத்தை போல், தமிழ் மற்றும் ஹாலிவுட் என 600க்கும் மேற்பட்ட படங்களையும், அவர்கள் மறுசீரமைப்பு செய்து மீட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE