உலகில் பிரிக்க முடியாத பல விஷயங்களில் குழந்தைகளும், பொம்மைகளும் ஒன்று. அந்த பொம்மைகள் ஆயிரம் கதைகள் சொல்லும். ஆண் குழந்தைகளுக்கு கார் பொம்மை என்றால், பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகள். புதிதாக கல்யாணமாகி கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு குழந்தை போல் இருக்கும் பொம்மைகள் பிடிக்கும்.
மேஜை அலங்கார விரிப்புகள், குழந்தைகள் விரும்பும் டெடிபியர் பொம்மைகள், ஹேண்ட் பேக், பர்ஸ், வீட்டு வாசலில் தொங்க விடப்படும் தோரணங்கள், தொப்பிகள், வண்ண கூடைகள், பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள், கை, கால் உறை, செல்போன் பவுச், மாலை, கீ செயின் என எண்ணிலடங்கா அலங்கார படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவர் செய்யும் பொம்மைகள் கண்களை ஈர்க்கின்றன.அவர் நம்மிடம் பகிர்ந்தவை:எனக்கு சிறு வயதில் இருந்தே, கைவினை பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் தான் நுால் மூலம் அலங்கார பொருட்களை விதவிதமாக தயார் செய்ய துாண்டியது. நீளமான ஊசியில் கொக்கி இருக்கும், அதில் காட்டன் நுாலை கோர்த்தபடி பொருட்களை வடிவமைக்க வேண்டும்.காட்டன் நுால்கள் மும்பையில் வாங்குகிறேன்.
பல வருடங்கள் ஆனாலும், நிறம் மங்காமல் பொலிவுடன் காட்சி அளிக்கும். அடிப்படை நுணுக்கங்களை கற்றுக்கொண்டால், அதன் பிறகு நம்முடைய கிரியேட்டிவிட்டி தான். அதை கொண்டு புதிது புதிதாக, லேட்டஸ்ட் மாடல் பொம்மைகளை உருவாக்கி அசத்தலாம்.எத்தனை முறை அடித்தாலும் தாங்கும் மரப்பாச்சி பொம்மை முதல் களிமண், பஞ்சு, பிளாஸ்டிக், பேசினால் திருப்பி பேசும் பொம்மைகள் வரை எத்தனையோ ரக பொம்மைகளை பார்த்துவிட்டோம். கையால் தயாரிக்கும் பொம்மைகளுக்கு எப்போதும் எங்கேயும் வரவேற்பு இருக்கும்.பிளாஸ்டிக்கை தவிர்க்க விரும்புகிறவர்கள், நுாலால் ஆன பொம்மைகளை வாங்கிச்செல்கின்றனர்.
ஆரம்பத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் செய்து கொடுத்தேன். தற்போது பலரும் தங்கள் விரும்பத்துக்கேற்ப கலைப்பொருட்கள் கேட்கத்துவங்கியுள்ளனர். ஒரு பொம்மை செய்ய ஒருநாள் நிச்சயம் எடுக்கும். 4 இன்ச் முதல் செய்கிறேன்.விலைக்கு தக்கபடி இதில் கூடுதல் வேலைப்பாடுகளை செய்யலாம். பத்து வயதிற்கு மேற்பட்டவருக்கு பயிற்சி அளித்தும் வருகிறேன். வருமானத்திற்கு மட்டுமின்றி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களின் மனதுக்கு இதமளிக்கும் மருந்தாகவும் இந்த கலை இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE