வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்; இன்றைய இளைஞர்கள் பலருக்கும், வெயிலின் அருமை ஐஸ்கிரீமின் 'ஜில்'லிடும் சுவையில்தான் தெரிகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக, கோடை வெயில் கொளுத்தியபோதும் ஊரடங்கு காரணமாக, ஐஸ்கிரீமைச் சுவைக்க பலராலும் இயலாத நிலை. இந்த முறை கொளுத்தும் கோடை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.ஐஸ்கிரீம் தொழில்துறையை, ஊரடங்கு பெருமளவு புரட்டிப்போட்டது என்று தான் செல்ல வேண்டும். வழக்கமாக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஐஸ்கிரீம் விற்பனை, நாடு முழுவதும் இருக்கும்.
ஆனால், இது கடந்த இரு ஆண்டுகளில், 50 முதல் 70 சதவீதம் வரை பாதித்துவிட்டது. பல சிறு ஐஸ்கிரீம் நிறுவனங்கள் தங்கள் தொழிலையே கைவிட வேண்டிய நிலை இருந்தது.கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஐஸ்கிரீம் விற்பனை சூடுபிடித்தது. திருப்பூரிலும் களைகட்டியது.''ஓட்டல்களில் ஆகட்டும்; தனியார் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களில் ஆகட்டும்; தெருவோரக் கடைகள் ஆகட்டும்... ஐஸ்கிரீம் விற்பனை துாள் கிளப்பியது. தற்போது ஐஸ்கிரீம் விற்பனை 50 சதவீதம் வரை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது.
இந்தாண்டு ஐஸ்கிரீம் விற்பனை 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை நடைபெறலாம்'' என்று சொல்கின்றனர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்கள்.பலர் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்து சாப்பிடுகின்றனர். இதற்கு கைகொடுக்கின்றன, 'யூடியூப்' சேனல்கள். சில சமயங்களில் கடையை விட சூப்பரான ருசியுடன், வீட்டில் தயாராகும் ஐஸ்கிரீம்கள் இருக்கின்றன.''அக்னி நட்சத்திர நாளில் இருந்தே திருப்பூரில் குளுமையான கால நிலை நிலவுகிறது. திடீர்னு இப்படி காலநிலை மாறும்னு யாரும் நினைச்சுக்கூட பார்க்கலே, இருந்தாலும், ஜில்லென்ற கால நிலையிலும் ஐஸ்கிரீம் சுவைப்பதும் தனி சுகம் அல்லவா'' என்று சொல்கின்றனர், ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE