குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம்சிந்தனையாளர் கூட்டத்தில் காங்., வலியுறுத்தல்

Added : மே 14, 2022
Advertisement
உதய்பூர், மே ௧௫-'பயிர்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, சட்ட ரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் கூட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இக்கூட்டத்தில், இரண்டாம்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம்சிந்தனையாளர் கூட்டத்தில் காங்., வலியுறுத்தல்



உதய்பூர், மே ௧௫-

'பயிர்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, சட்ட ரீதியான உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் கூட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இக்கூட்டத்தில், இரண்டாம் நாளான நேற்று விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி, ஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது:சிந்தனையாளர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னை, மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்கள், எம்.எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.சர்ச்சைக்குரிய மூன்று விவசாய சட்டங்களை, மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சித்தால், அதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும். பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு, சட்டரீதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் எனக்கூறிய மத்திய அரசு, அவர்களின் கடன்களை தான் இரட்டிப்பாக்கி உள்ளது.கட்சி பதவிகளில் எஸ்.சி., - எஸ்.டி., சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

@

'ஜி.எஸ்.டி., இழப்பீடு 3 ஆண்டுக்கு நீட்டிக்கணும்'

சிந்தனையாளர் கூட்டத்தில், பொருளாதார பிரச்னை பற்றி விவாதிக்க, முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரம் தலைமையில் குழு ஒன்றை சோனியா அமைத்துள்ளார். சிந்தனையாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருளாதார பிரச்னைகள் பற்றி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:
நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தொற்றுக்கு பின், பொருளாதார மீட்சி குறிப்பிடும்படி இல்லை. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், பணவீக்கத்தை அதிகரிக்க வைக்கின்றன. மாநில அரசுகளின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மாநிலங்களுக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



சோனியா ஆலோசனை

சிந்தனையாளர் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக, அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவது பற்றி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா நேற்று ஆலோசித்தார். இதில், கட்சியின் பொதுச் செயலர்கள், மாநில தலைவர் மற்றும் சட்டசபை தலைவர்கள் பங்கேற்றனர். பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றை கண்டித்து, நாடு தழுவிய அளவில் மீண்டும் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், காங்., - எம்.பி., ராகுலும் பேசினார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X