இன்று இனிதாக

Added : மே 14, 2022
Advertisement
ஆன்மிகம்சித்திரை தேர்த்திருவிழாகொங்கு நாட்டில் பாடல்பெற்ற திருத்தலங்கள் ஏழில் முதலாவதாக விளங்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதன் சிறப்பாக இன்று வண்டித்தாரை பரிவேட்டை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ராகமஞ்சரி செல்லத்துரையின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. தவறவிடாதீர்கள்!தத்துவ பயிற்சிதத்துவஞானி வேதாத்திரி

ஆன்மிகம்

சித்திரை தேர்த்திருவிழா
கொங்கு நாட்டில் பாடல்பெற்ற திருத்தலங்கள் ஏழில் முதலாவதாக விளங்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதன் சிறப்பாக இன்று வண்டித்தாரை பரிவேட்டை நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ராகமஞ்சரி செல்லத்துரையின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

தவறவிடாதீர்கள்!
தத்துவ பயிற்சிதத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் தவம் மற்றும் தத்துவ விளக்க விரிவுரைகளை கேட்டு தெளிவு பெற அருமையான வாய்ப்பு.பேராசிரியர் சண்முகசுந்தரம் தவத்துவ விளக்கப்பயிற்சியினை வழங்க உள்ளார். கொங்கு நகர் கிழக்கில் உள்ள எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையத்தில், காலை, 9:30 மணிக்கு நடக்கும் பயிற்சியில், மனவளக்கலை பயில்வோர், ஏற்கனவே பயிற்சி எடுத்துள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பங்கேற்கலாம்.
பொது
சதுரங்க போட்டி
எல்.எஸ்., சதுரங்க அகாடமி சார்பில் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு மாநில அளவிலான போட்டி, கோவில் வழி பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளியில் இன்று நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு துவங்கும் போட்டியில், 9 வயது, 12 வயது, 15 வயதினர் என மூன்று பிரிவுகளில் குழந்தைகள் தங்கள் போட்டியாளர்களை களம்காண உள்ளனர்.
பாடவா உன் பாடலை!
இன்னிசை பிரியார்களுக்கு அரிய வாய்ப்பு. திரைப்பட பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி., சரண், யுகேந்திரன் வாசுதேவன், ஏ.ஆர். ரஹ்மான் சகோதரி ரெஹானா ஆகியோர் பங்கேற்கும் இசைநிகழ்ச்சி நம்ம திருப்பூரில் அரங்கேறுகிறது. கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில், மாலை, 5:00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம். இசை மழையில் நனையலாம்.
பண்பாட்டு பயிற்சி
நம் பண்பாடு, கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நோக்கில் சேவாபாரதி அமைப்பு சார்பில் கோடைகால பண்பாட்டு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சிவாஜி மந்திர் அலுவலகத்தில் மாலை, 4:00 மணிக்கு நடக்கும் முகாமில், ஸ்லோகம், பஜனை, யோகா, கதை சொல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஐந்து முதல், 15 வயது வரையுள்ள சிறுவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X