நாம் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதன் விளைவாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.
இருப்பினும், இயற்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் பலர் முயற்சித்து வருகின்றனர். அவ்வகையில், சேலம் மாவட்டம், தலைவாசலை சேர்ந்த பூபாலன், 42 சுரைக்காயில் பல்வேறு பொருட்களை தயாரித்து அசத்தி வருகிறார்.பூபாலன், நம்முடன் பகிர்ந்தவை:நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். பி.இ., சிவில் முடித்துள்ளேன். அப்பாவின் விவசாய தொழிலையே நானும் செய்து வருகிறேன்.
இயற்கை மீது ஆர்வம் என்பதால், தேங்காய் சிரட்டையில் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பெற்றுள்ளேன்.பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக இயற்கையான பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன். இதற்காக சுரைக்காயை தேர்வு செய்து, அதில், பாட்டில், குருவிக்கூடு செய்கிறேன். பென்சில் பேனா, மளிகை பொருட்கள், காய்கள் உள்ளிட்டவற்றை வைத்து பயன்படுத்தலாம்.
தேன், மருந்து உள்ளிட்ட பொருட்களையும் இவற்றில் சேமித்து வைக்கலாம். பயன்படுத்துவதை பொறுத்து எளிதில் சேதமடையாது. சித்த மருத்துவர்கள் பலரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு சுரைக்காயை வாங்கி, உட்புறம் உள்ள காயை அகற்றிவிட்டு, காயவைத்து குடுவையாக்குவேன்.இதிலிருந்து, பாட்டில், குருவிக்கூடு, உண்டியல் என, பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்கிறேன். பிளாஸ்டிக் பொருளுக்கு இது மாற்று என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE