நொய்யல் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வீடு! கலெக்டர் முயற்சியால் கனவு நனவாகிறது

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:தொழில் வளர்ச்சி காரணமாக, திருப்பூர் வேகமாக வளர்ச்சி பெறும் போது, நீர்நிலைகள், ஓடைகளும் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன.ஏழைகள், துப்புரவு தொழிலாளர்கள் பலர், 40 ஆண்டுகளாக, நீரோடைகள் ஓரமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.குடிசை மாற்று வாரியத்தில், கடந்த 10 ஆண்டுகளில், 9,000 வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.நீரோடைகள் ஓரமாக
நொய்யல் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வீடு! கலெக்டர் முயற்சியால் கனவு நனவாகிறது

திருப்பூர்:தொழில் வளர்ச்சி காரணமாக, திருப்பூர் வேகமாக வளர்ச்சி பெறும் போது, நீர்நிலைகள், ஓடைகளும் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தன.ஏழைகள், துப்புரவு தொழிலாளர்கள் பலர், 40 ஆண்டுகளாக, நீரோடைகள் ஓரமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.குடிசை மாற்று வாரியத்தில், கடந்த 10 ஆண்டுகளில், 9,000 வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பல வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.நீரோடைகள் ஓரமாக வசிக்கும் மக்கள், 10 சதவீதம் பங்களிப்பை செலுத்த முடியாததால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்று ஏமாந்து நிற்கின்றனர்.குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள வீடு மட்டுமே, பயனாளிக்கு வழங்கப்படுகிறது; அந்த நிலம், வாரியத்திடமே இருக்கும். இதனால், வீடு ஒதுக்கீடு ஆணையை பெற்றாலும், அதைக்கொண்டு, அடமான கடன் பெறவும் வழியில்லை.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரை சீரமைக்கப்படும் பணியும் நடக்கிறது. இதனால், நொய்யல் கரையோர மக்கள் சிலருக்கு, அடுக்குமாடி வீடு கட்ட, மாநகராட்சி சார்பில், 45 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. மேலும், 50 ஆயிரம் வங்கிக்கடன் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


இழுபறிக்கு தீர்வு

மாநகராட்சி பகுதியில் மட்டும், நீரோடைகளில் உள்ள, 600 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி வீடு கொடுக்க வேண்டும். அவர்களில், 90 சதவீதம் பேர், பங்களிப்பை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். கடந்த, 10 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இப்பிரச்னைக்கு, அரசு திட்டங்களை கொண்டே, கலெக்டர் புதிய தீர்வை கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார்.அதாவது, நொய்யல் கரையோரம் வசிக்கும் ஏழை குடும்பங்களை, மகளிர் குழுக்களாக இணைந்து, மகளிர் திட்டத்தில் கடன் வழங்கி, அடுக்குமாடி வீடுகளில் குடியேற வழி செய்யப்பட்டுள்ளது.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்அலெக்ஸாண்டர் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மட்டும், 600 அடுக்குமாடி வீடுகளுக்கு கடன் வேண்டுமென, கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால், மகளிர் திட்டம், நகர்ப்புற வாழ்வாதார திட்டங்களில், கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 160 மகளிர் குழுக்களை ஏற்படுத்தி, தலா, ஐந்து லட்சம்ரூபாய் கடன் வழங்கியுள்ளோம். இரண்டு வாரங்களில், 160 குழுக்களை பதிவு செய்து, விரைவில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பங்களிப்பு செலுத்த முடியாதவர்களுக்கு, கடன் வழங்கி, வீடு பெறுவதுடன், சுயதொழில் துவங்கவும், கலெக்டர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்.மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு நடவடிக்கையால், குடிசைகளில் வாழ்ந்த ஏழை மக்களின், கான்கிரீட் வீடு கனவு நனவாக போகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.மாநகராட்சி பகுதியில் மட்டும், நீரோடைகளில் உள்ள, 600 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி வீடு கொடுக்க வேண்டும். அவர்களில், 90 சதவீதம் பேர், பங்களிப்பை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.கடந்த, 10 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இப்பிரச்னைக்கு, அரசு திட்டங்களை கொண்டே, கலெக்டர் புதிய தீர்வை கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X