வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஹிந்தி மொழி குறித்த கருத்துக்கு தமிழக அமைச்சர் பொன்முடி முன்னதாக எதிர்ப்பு தெரிவித்து இருந்ததை அடுத்து தற்போது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் 'ஒரே நாடு ஒரே மொழி' என்கிற கொள்கையை வலியுறுத்தும் வகையில் ஹிந்தியை தேசிய மொழியாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றை அனைவரும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியாவில் அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்று அமித் ஷா தெரிவித்திருந்தார். அதே சமயத்தில் மாநில மொழிகளுக்கு மாற்றாக ஹிந்தி அமைய வேண்டுமென தான் கூறவில்லை என்று தெரிவித்தார். ஆனால் அவரது இந்தப் பேச்சு முன்னதாக தென்னிந்தியா எதிர்க்கட்சிகளிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாநில மொழிகளை பலவீனப் படுத்துவதற்காகவே அமித்ஷா இவ்வாறு கூறுவதாக சர்ச்சை எழுந்தது. முன்னதாக தமிழக மாநில கல்வி அமைச்சர் பொன்முடி அமித் ஷாவின் இந்த அறிக்கையை எதிர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமித் ஷாவின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இந்திய அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE