திருவனந்தபுரம்:புராதன பொருட்கள் வாங்கித் தருவதாக நடந்த மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக பிரபல நடிகர் மோகன் லாலுக்கு, அமலாக்கத் துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
கேரளாவின் கொச்சியில் உள்ள கலுார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மோன்சன். புராதன பொருட்கள் வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து, மோன்சனை கடந்த ஆண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் கறுப்புப் பண மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, பிரபல நடிகர் மோகன் லால், கொச்சி, சென்னை, ஊட்டி, துபாய் நகரங்களில் உள்ள தன் வீடுகளில், அரிய புராதன பொருட்களை சேகரித்து வைத்துள்ளார்.இந்நிலையில், மோன்சன் மீதான மோசடி வழக்கு தொடர்பாக மோகன் லாலிடம் விசாரிக்க திட்டமிட்ட அமலாக்கத் துறை, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement