புதிய எட்டு மண்டலங்களை பிடிக்க தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டா போட்டி! குழு தலைவர் பதவிக்காக அமைச்சர், மா.செ., வீடுகளில் 'தவம்'

Added : மே 14, 2022
Advertisement
சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எட்டு மண்டலங்கள், இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளன. புதிய மண்டலங்களின் குழுத் தலைவர் பதவியை பிடிக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே, போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களின் சிபாரிசை பெற அவர்களின் வீடுகளில், கவுன்சிலர்கள் தினமும் முற்றுகையிட்டு வருகின்றனர்.சென்னை
   புதிய எட்டு மண்டலங்களை பிடிக்க தி.மு.க., கவுன்சிலர்கள்  போட்டா போட்டி!  குழு தலைவர் பதவிக்காக அமைச்சர், மா.செ., வீடுகளில் 'தவம்'

சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எட்டு மண்டலங்கள், இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளன. புதிய மண்டலங்களின் குழுத் தலைவர் பதவியை பிடிக்க, தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே, போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக, அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்களின் சிபாரிசை பெற அவர்களின் வீடுகளில், கவுன்சிலர்கள் தினமும் முற்றுகையிட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போதைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த பேரூராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, 155 வார்டுகளாக இருந்த எண்ணிக்கை, 200 ஆக உயர்த்தப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும், குறிப்பிட்ட வார்டுகளை உள்ளடக்கிய மண்டலங்களின் எண்ணிக்கை, 10ல் இருந்து 15 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது வரை, சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்கள் உள்ளன.இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில், சென்னை மாநகராட்சியில் தி.மு.க., - 153 மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் - 25 என, 178 இடங்களைக் கைப்பற்றின.தி.மு.க., கவுன்சிலர்களில் பலர், வட்ட மற்றும் பகுதி செயலர்களாக உள்ளனர். தி.மு.க., தலைமையிடமும் பெரும்பாலானோர் நெருக்கம் காட்டி வருகின்றனர். இதனால், 15 மண்டலங்களின் குழு தலைவர் பதவியை பிடிக்க, கடும் போட்டி நிலவியது.அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் ஆசி பெற்ற 15 பேர், மண்டல குழுத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆறு பேருக்கு நிலைக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.சிலருக்கு, நிலைக்குழு உறுப்பினர் பதவி கிடைத்தாலும், ஆதாயம் தரக்கூடிய பதவிகள் கிடைக்காததால், விரக்தியில் உள்ளனர்.அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில், சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப, மண்டலங்களை விரிவாக்கம் செய்ய, தி.மு.க., தலைமை முடிவு செய்தது. அதன்படி, சட்டசபை மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னை மாநகராட்சியில், 22 சட்டசபை தொகுதிகள் வந்தாலும், மாவட்டத்தை பொறுத்தவரை, 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன.மீதமுள்ள தொகுதிகள் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன.தற்போது அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில், சென்னை சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப, மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 23 ஆக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சோழிங்கநல்லுார் தொகுதியில் அதிக மக்கள் தொகை இருப்பதால், அது இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது. புதிய மண்டலங்கள், இந்த ஆண்டு முதலே செயல்பாட்டுக்கு வருகின்றன.எனவே, ஏற்கனவே பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள பலர், புதிய மண்டலங்களில் தங்களை குழுத் தலைவராக நியமிக்கும்படி, மாவட்ட செயலர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.சமாவட்ட செயலர்கள், அமைச்சர்களின் வீடுகளுக்கு சில கவுன்சிலர்கள் தினமும் சென்று, பதவிக்கு தவமிருந்து வருகின்றனர்.

இது குறித்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின், பல கவுன்சிலர்கள் தங்களது ஆசையை, கட்சி மேலிடத்தில் தெரிவித்து வந்தனர். மண்டலங்களின் எண்ணிக்கையை விட அதிகமானோர் பதவி கேட்டதால், சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப மண்டலங்களை உயர்த்தும்படி, அப்போதே கோரிக்கை வைத்தோம்.அதை அரசு ஏற்று, மண்டலங்களை விரிவுப்படுத்த உள்ளது.

புதிதாக வரும் எட்டு மண்டலங்களின் குழுத் தலைவராக பதவியேற்க, பல கவுன்சிலர்கள் தங்கள் ஆசையை, கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளனர். தற்போது மண்டல குழுத் தலைவராக இருப்பவர்களும், பல்வேறு வகையில் ஆதாயம் தரக்கூடிய வார்டுகளை கேட்டு வருகின்றனர்.ஓரிரு மாதங்களில் மண்டலங்கள் பிரிக்கப்பட்ட பின், புதிய எட்டு தலைவர்கள் யார் என்பதை, தி.மு.க., தலைமை வெளியிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X