செம்பியம் :சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான மின்சார ஆட்டோவில் பொருத்தியிருந்த 'பேட்டரி'களை காணவில்லை என, போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.சென்னை, அகரம், எஸ்.ஆர்.பி., கோவில் தெருவில் வசிப்பவர் கீதா, 50. இவர், சென்னை மாநகராட்சி மண்டலம் 6ன் துப்புரவு ஆய்வாளர்.நேற்று முன்தினம் அதிகாலை, ௨:௩௦ மணிக்கு, துப்புரவு பணியாளர்கள், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான நான்கு மின்சார ஆட்டோக்களை, எஸ்.ஆர்.பி., கோவில் தெருவிலுள்ள 69வது வார்டு அலுவலகத்தில் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.மீண்டும், அன்று காலை ௬:௪௫ மணிக்கு, மின்சார ஆட்டோவை எடுக்கச் சென்ற போது, நான்கு ஆட்டோக்களில் இருந்த 11 'பேட்டரி'களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு, ௧ லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து, துப்புரவு ஆய்வாளர் கீதா அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE