சென்னை, விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த வழக்கில், தனியார் பஸ் ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; ஆட்டோ ஓட்டுனர். இவர், அடையாறு மேம்பாலத்தில் 2014 நவ., 3ல் அதிகாலை, தன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ், ஆட்டோ மீது மோதியது.இந்த விபத்தில், படுகாயம் அடைந்த ராஜேந்திரன், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார், பஸ் ஓட்டுனரான காஞ்சிபுரம் மாவட்டம், மருதம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை, 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:தனியார் பஸ் ஓட்டுனர் உதயகுமார், பஸ்சை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதே விபத்துக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்திய தண்டனை சட்டம்: பிரிவு - '304ஏ' அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், பிரிவு 279ல், அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காக, ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE