ஆசிரியை வீட்டில் கொள்ளைபெண்ணுக்கு 'கம்பி'

Added : மே 14, 2022 | |
Advertisement
ஐ.சி.எப். :ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, நகைகளை கொள்ளையடித்து விற்ற பெண்ணை கைது செய்த போலீசார், 20 சவரனை பறிமுதல் செய்தனர்.வில்லிவாக்கம், வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரிய பிரசாத், 55; தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டில் கடந்த ஏப்., 23ம் தேதி, 57 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக, ஐ.சி.எப்., போலீசார்
ஆசிரியை வீட்டில் கொள்ளைபெண்ணுக்கு 'கம்பி'

ஐ.சி.எப். :ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, நகைகளை கொள்ளையடித்து விற்ற பெண்ணை கைது செய்த போலீசார், 20 சவரனை பறிமுதல் செய்தனர்.வில்லிவாக்கம், வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரிய பிரசாத், 55; தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டில் கடந்த ஏப்., 23ம் தேதி, 57 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக, ஐ.சி.எப்., போலீசார் விசாரித்தனர்.இதில், செங்குன்றம் முண்டி அம்மா நகரைச் சேர்ந்த கோகிலா, 30, அவரது கூட்டாளியான சரவணன், 34, ஆகிய இருவரும் சேர்ந்து திருடியது தெரிந்தது.இதையடுத்து நேற்று முன்தினம், ஐ.சி.எப்., கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே, கோகிலாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், கொள்ளையடித்த நகைகளை, சென்னை பூக்கடை பகுதியில் விற்றாத ஒப்புக் கொண்டார்.போலீசார் அங்கு சென்று, 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். கோகிலாவை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான கூட்டாளி சரவணனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X