காய்கறி சாகுபடி பந்தலுக்கு மானியம்

Added : மே 14, 2022
Advertisement
திருப்பூர்:காய்கறி மகசூலை பெருக்க, தோட்டக்கலையின், 50 சதவீத மானியத்துடன், நிரந்தர பந்தல் அமைக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.காய்கறி பயிர்களுக்கு பந்தல் அமைக்க, விவசாயிகளுக்கு, எக்டருக்கு, பின்னேற்பு மானியமாக, 50 சதவீதம் அல்லது, இரண்டு லட்சம் ரூபாய் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படுகிறது. ஒரு எக்டருக்கு, பந்தல் காய்கறி விதை வாங்க, 5,600 ரூபாய்

திருப்பூர்:காய்கறி மகசூலை பெருக்க, தோட்டக்கலையின், 50 சதவீத மானியத்துடன், நிரந்தர பந்தல் அமைக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.காய்கறி பயிர்களுக்கு பந்தல் அமைக்க, விவசாயிகளுக்கு, எக்டருக்கு, பின்னேற்பு மானியமாக, 50 சதவீதம் அல்லது, இரண்டு லட்சம் ரூபாய் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படுகிறது. ஒரு எக்டருக்கு, பந்தல் காய்கறி விதை வாங்க, 5,600 ரூபாய் வழங்கப்படும்.
எட்டு அடி கல் துாண் அல்லது சிமென்ட் துாண் நட்டு, பந்தல் அமைக்க, 1.94 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பாகல், புடலை, பீர்க்கன், சுரைக்காய்,சவ் சவ், பந்தல் அவரை, போல் பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கோவைக்காய், திராட்சை, டிராகன் புரூட், கிவி, பேஷன் புரூட் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யலாம்.பந்தல் அமைத்து பயிர் சாகுபடி செய்வதன் மூலம், கொடி வகை பயிர்களின் வளர்ச்சி, சீராக இருப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும்; காய்கறியின் தரமும் நன்றாக இருக்கும்.திருப்பூர் மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2021-22ல் நிரந்தர பந்தல் அமைக்க, 21.40 எக்டருக்கு, 42.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.பயன்பெற விரும்பும் விவசாயிகள், பாஸ்போர்ட் அளவு போட்டோ -2, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா -அடங்கல், நில வரைபடம் மற்றும் உறுதிமொழி படிவம் உள்ளிட்ட ஆவணங்களுடன், தோட்டக்கலைத்துறை அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X