கோட்டூர்புரம், :காந்தி மண்டபம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி ஆய்வாளர், வேன் மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.சென்னை, பல்லாவரம் சலசிங்முதலி தெரு, அருமலை சாவடியைச் சேர்ந்தவர் சித்ரா, 46; கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார்.இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, 'ஹோண்டா ஆக்டிவா' இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார். காந்தி மண்டபம் மேம்பாலத்தில் சென்ற போது, லோடு வேன் ஒன்று, சித்ராவின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறி, வண்டியுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே, அங்கிருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
சென்னை, அசோக் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கஜேந்திரன், 56, நேற்று முன்தினம் நள்ளிரவு, இரு சக்கர வாகனத்தில், ஆறாவது அவென்யூவில் கண்காணிப்பு பணியில் இருந்தார்.அங்கு தறிகெட்டு வந்த கார், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்டார். இதில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.உடனடியாக அவர், கே.கே., நகர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 38, என்பவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE