சென்னை, :போக்குவரத்து காவல் அழைப்பு மையங்கள் வாயிலாக, நிலுவையில் இருந்த 72 ஆயிரத்து 205 வழக்குகளில், 1.95 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையில் போக்குவரத்து விதிமீறலில், வழக்குகள் தேக்க நிலையை தவிர்க்க 10 அழைப்பு மையங்கள், ஏப்., 11ம் தேதி துவக்கப்பட்டன. இதில், ஏப்., 12ம் தேதி முதல் மே 11ம் தேதி வரையில், 8,088 தொலைபேசி அழைப்புகள் செய்து, சாலை விதிகளை மீறியோருக்கு நிலுவையில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.மேலும், அபராத தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்தாவிட்டால், நீதிமன்றங்களுக்கு வழக்குகள் அனுப்பப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.இதன் வாயிலாக, 30 நாட்களில், 72 ஆயிரத்து 205 வழக்குகளில் அபராதம் செலுத்தப்பட்டு, 1.95 கோடி ரூபாய் அரசு கணக்கில் பெறப்பட்டுள்ளது.இதில், 53க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள், 100க்கும் மேற்பட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக ஒரே வாகனம், 271 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE