ஆவடி, :ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சாலையில், கேட்பாரற்று கிடந்த 1 லட்சம் ரூபாயை, போலீசாரிடம் ஒப்படைத்தவர்களை, கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார்.ஆவடி, அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் தனசேகரன், 20; பால் வியாபாரம் செய்கிறார்.நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில், நண்பர் சூர்யகுமார் என்பவருடன் சென்று, காணாமல் போன தன் மாடுகளை தேடியுள்ளார்.அப்போது, சரஸ்வதி நகர் 11வது தெருவில் பணம் சிதறிக் கிடந்துள்ளது. இது குறித்து, திருமுல்லைவாயில் போலீசாருக்கு தகவல் அளித்த அவர்கள், பணத்தை எண்ணிப் பார்த்த போது, 1 லட்சம் ரூபாய் இருந்தது.இந்நிலையில், திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் 11வது தெருவைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், இருசக்கர வாகன 'டேங்க் கவரில்' வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் காணவில்லை என புகாரளிக்க, காவல் நிலையம் சென்றார்.விசாரணையில், போலீசார் கைப்பற்றிய பணம் சசிகுமாருக்கு சொந்தமானது என உறுதியானதால், அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தனசேகரன் மற்றும் சூர்யகுமாரை, ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE