28 சவரன் நகை கொள்ளை

Added : மே 14, 2022
Advertisement
அம்பத்துார் :அம்பத்துார், ஒரகடம் வளர்மதி நகரைச் சேர்ந்தவர் தீபிகா, 32. இவர், தேனாம்பேட்டையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால், பெரம்பூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.வழக்கம் போல், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற தீபிகா, வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு

அம்பத்துார் :அம்பத்துார், ஒரகடம் வளர்மதி நகரைச் சேர்ந்தவர் தீபிகா, 32. இவர், தேனாம்பேட்டையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால், பெரம்பூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.வழக்கம் போல், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற தீபிகா, வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் துணிகளுக்கு அடியில் வைத்திருந்த, 28 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இது குறித்து தீபிகா அளித்த புகாரின்படி, அம்பத்துார் போலீசார்விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X