ராஜஸ்தானின் 'கல்பேலியா' நடனம்சென்னையிலும் கண்டுகளிக்கலாம்

Added : மே 14, 2022
Advertisement
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பாரம்பரிய நடனங்களில், 'கல்பேலியா' நடனமும் ஒன்று.அங்குள்ள பூர்வீக குடிமக்களால் ஆடப்படும் நடனம், இது. இந்த நடனத்தை கற்றுத்தர தனியாக குருவோ, சிறப்பு நடனப் பள்ளிகளோ கிடையாது.தாய், தன் மகளுக்கும், மகள் அவரது மகளுக்கும் என்ற முறையில் தான், இந்த நடனம் பாரம்பரியமாக தொடர்ந்து உயிர்த்து வருகிறது. ஒரு வீட்டில் பெண் பிறக்காத நிலையில், அந்த
ராஜஸ்தானின் 'கல்பேலியா' நடனம்சென்னையிலும் கண்டுகளிக்கலாம்


ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பாரம்பரிய நடனங்களில், 'கல்பேலியா' நடனமும் ஒன்று.

அங்குள்ள பூர்வீக குடிமக்களால் ஆடப்படும் நடனம், இது. இந்த நடனத்தை கற்றுத்தர தனியாக குருவோ, சிறப்பு நடனப் பள்ளிகளோ கிடையாது.தாய், தன் மகளுக்கும், மகள் அவரது மகளுக்கும் என்ற முறையில் தான், இந்த நடனம் பாரம்பரியமாக தொடர்ந்து உயிர்த்து வருகிறது. ஒரு வீட்டில் பெண் பிறக்காத நிலையில், அந்த குடும்பத்தில், 'கல்பேலியா' நடனம் முற்றுப்பெறும்.இதற்கான இசை மற்றும் பாட்டும் தனிச்சிறப்பு உள்ளவை. இதற்கு ஏற்ப அதிவேக நடன அசைவுகள் உடையது, கல்பேலியா நடனம். இந்த நடனத்தை ஆடுவது, எளிதானது அல்ல; கண்சிமிட்டும் நேரத்தில், சில அபார அசைவுகளுடன் நடனமணிகள் கடந்து சென்றுவிடுகின்றனர்.இந்த நடனம் சிரமமானது என்பதாலோ அல்லது வருமானம் தரக்கூடிய வேறு பல தொழில்கள் கைகூடி வந்ததன் காரணமாகவோ, இப்போது கல்பேலியா ஆடுவோர், ராஜஸ்தான் முழுதும் தேடினாலும், 100 பேர்தான் தேறுவர்.அழிந்து வரும் இந்த நடனக்கலையை காப்பாற்றும் விதத்திலும், நாடு முழுதும் பிரபலப்படுத்தும் விதத்திலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 'தட்சின்சித்ரா' கலைக்கூடத்தில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.நடனம் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநில பாரம்பரிய வாய்ப்பாட்டு மற்றும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்கள் மற்றும் பொம்மலாட்ட கலைஞர்களும் வந்துள்ளனர். அவர்களது மாநில பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதற்கென வந்துள்ள சிறப்பு குழுவினர், மூன்று நாள் நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இன்றுடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X