செல்லப் பிராணிகளுக்கு தனி மயானம்மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிப்பு

Added : மே 14, 2022 | |
Advertisement
வேளச்சேரி, :வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கான தனி மயானத்தில், நாய், பூனைகளை தகனம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என, 'ப்ளூ கிராஸ்' அமைப்பினர் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சியில் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில், 24
செல்லப் பிராணிகளுக்கு தனி மயானம்மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிப்பு

வேளச்சேரி, :வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள செல்லப் பிராணிகளுக்கான தனி மயானத்தில், நாய், பூனைகளை தகனம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என, 'ப்ளூ கிராஸ்' அமைப்பினர் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சியில் 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 57 ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் புளியந்தோப்பு, ராயப்பேட்டை மற்றும் கண்ணம்மாபேட்டையில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் உள்ளன. வேளச்சேரியில் ப்ளூ கிராஸ் அமைப்பின் சார்பில் நாய்களுக்கான கருத்தடை மையம் இயங்கி வருகிறது.வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் அமைப்பு, 4 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, 500 நாய்கள், 187 பூனைகள், 300 புறாக்கள், 120 மாடுகள், 60 முயல்கள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.சிலர், வீட்டில் வளர்க்க முடியாத செல்ல பிராணிகளை, இங்கு கொடுத்துச் செல்கின்றனர். அதேபோல், செல்லப்பிராணிகள் இறந்தால் அதை குப்பைத் தொட்டி, நீர்நிலைகள் மற்றும் சாலையோரம் வீசுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும் கடும் சுகாதார சீர்கேடு உருவாகிறது.இதை தவிர்க்க, தமிழகத்தில் முதல் முறையாக, கடந்தாண்டு ப்ளூ கிராஸ் வளாகத்தில், 7,000 சதுர அடி பரப்பில், 60 லட்சம் ரூபாய் செலவில், நாய், பூனை தகனம் செய்யும் மயானம் அமைக்கப்பட்டது.இது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பினர் கூறியதாவது:செல்லப்பிராணிகள் இறந்தால், கிராமத்தில் குழி தோண்டி புதைப்பர். சென்னையில் கண்ட கண்ட இடங்களில் துாக்கி வீசுகின்றனர். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இதை தடுக்க, நாய், பூனைகளுக்கான எரிவாயு மயானம் அமைத்துள்ளோம். இங்கு தினமும், 10 முதல் 15 பிராணிகளின் உடல்களை தகனம் செய்கிறோம். சிலர், செல்லமாக வளர்க்கும் நாய் இறந்தால், அதை இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கு போல் செய்து தகனம் செய்வர். எரியூட்டியபின், சாம்பலை வாங்கி செல்வர். தகனம் செய்ய, பராமரிப்புக்கான கட்டணம் செலுத்த வேண்டும். தெரு நாய் இறந்தாலும், அதை கொண்டு வந்து தகனம் செய்வோரும் உள்ளனர். இதை, கண்ட இடங்களில் துாக்கி வீசக்கூடாது என்ற விழிப்புணர்வு பலரிடம் மேலோங்கி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X