சென்னை, : சென்னையில், கொரோனா ஊரடங்கிற்குப் பின் துவங்கியுள்ள ரஷ்யன் மேஜிக் ஷோ, குட்டீஸ்கள் மட்டுமின்றி, பெரியவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.சென்னை ஆழ்வார்பேட்டை, ரஷ்யன் கலாசார மையத்தில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ, கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கி நடந்து வருகிறது.வரும் ஜூன் 5ம் தேதி வரை நடக்க உள்ள இந்த ஷோ, ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், மாலை 4:00 மணி மற்றும் 7:00 மணி என, இரண்டு காட்சிகளாக அரங்கேற்றப்படுகிறது.கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் குழந்தைகளை மகிழ்விக்கும் மேஜிக் ஷோ நடக்கவில்லை. தற்போது, கொரோனா பயம் நீங்கியுள்ள நிலையில் துவங்கியுள்ள இந்த மேஜிக் ஷோ, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குறிப்பாக, குட்டீஸ்களையே மேடையேற்றி, அவர்களையும் மெஜிஷியனாக மாற்றும் அலெக்ஸ் பிளாக்கின், வீடியோ காட்சி வாயிலாகவும் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்.மேலும், 'லேசர் லைட்' ஒளியில் கண்களுக்கு விருந்தாகவும், இந்த மேஜிக் ஷோ ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. டிக்கெட் விபரங்களுக்கு 73973 89991 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE