சென்னை :சென்னை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நேற்று எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கி 'லீக்' போட்டியில், ஐந்து அணிகள் பங்கேற்று அசத்தின.சென்னை மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி 'லீக்' போட்டிகள், சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்தன.இதில் லயோலா அணி, சென்னை ஸ்டார், மெட்ராஸ் நேஷ்னல் ஹாக்கி கிளப், செயின்ட் பால்ஸ், அடையார் ஹாக்கி அகாடமி என, ஐந்து அணிகள் பங்கேற்றன.போட்டியில் ஐந்து அணிகள் மட்டும் பங்கேற்றதால், அனைத்து போட்டிகளும் 'நாக் - அவுட்' முறையில் நடத்தப்பட்டன. முதல் போட்டியில், சென்னை ஸ்டார் அணி - லயோலா அணிகள் மோதின.அதில், 5 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை ஸ்டார் அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில், செயின்ட் பால்ஸ் அணி, 3 - 1 என்ற கோல் கணக்கில், அடையார் ஹாக்கி அகாடமி அணியை வீழ்த்தியது.மற்றொரு போட்டியில், சென்னை ஸ்டார் அணி, 5 - 1 கோல் கணக்கில், மெட்ராஸ் நேஷ்னல் அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில், சென்னை ஸ்டார் அணி, செயின்ட் பால்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE