அண்ணா நகர் :அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், இரண்டு நாட்களில் 1,400 ஆட்டோக்களில் சாலை பாதுகாப்பு குறித்து 'ஸ்டிக்கர்' ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.சென்னை, அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'களை ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நியூ ஆவடி சாலையில், அவ்வழியாக செல்லும் ஆட்டோக்களில், வடக்கு இணை போக்குவரத்து கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள், 'ஸ்டிக்கர்'களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து ஆர்.டி.ஓ., பார்வேந்தர் கூறியதாவது:போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையகத்தின் உத்தரவின்படி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பொதுமக்கள் எளிதில் பார்க்கக்கூடிய ஆட்டோக்களின் பின்புறத்தில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 'ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.கடந்த இரண்டு நாட்களில், அண்ணா நகர் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட பகுதிகளில், 1,400 ஆட்டோக்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE