திருப்பூர்:ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை நேற்று முதல் துவங்கியது.தேர்வு சார்ந்த விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சி பட்டியல் பதிவேடு தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக அனைத்து ஆசிரியர்களும் வரும், 20ம் தேதி பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பொதுத்தேர்வு பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்வு பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிக்கை:வரும் 20ம் தேதிக்கு முன்பாக மதிப்பீடு பணிகளை பள்ளி அளவில் முடித்திருந்தால், அப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. வெளிநாடு செல்ல தடையின்மை சான்று பெற்ற ஆசிரியர்கள் இப்பணிகளை விரைந்து முடித்த பின் வெளிநாடு செல்லலாம். அவர்கள், 20ம் தேதி வரை காத்திருக்க தடையில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE