சென்னை:சென்னையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி, கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கினார்.சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஜாவித், 37. அதேபகுதியில் துணி கடை வைத்துள்ளார். இவரை மூன்று பேர் கும்பல் கத்தியால் வெட்டி, தப்பினர். குற்றவாளிகளை பிடிக்க, செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் முருகன், அஸ்கர் அலி, சிவகுமார், முத்துகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், செங்கல்பட்டைச் சேர்ந்த கலைச்செல்வம், 26; சென்னையைச் சேர்ந்த செல்வகுமார், 26; தினகரன், 20; அஜய், 29 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.விசாரணையில், தொப்பை கணேஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய, இரண்டு நாட்டு வெடிகுண்டுகள், மாதவரத்தில் மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.வண்ணாரப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ., சங்கர், போலீசார் மணிகண்டன், சதிஷ்குமார், ஷேக் முகமது, சிவபால கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்தி வந்த அய்யன்னா, 50, என்பவரையும் கைது செய்தனர்.இந்த சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை, கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE