அகர்தலா:திரிபுராவின் புதிய முதல்வராக, மாணிக் சாஹாவை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்துள்ளனர். வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூ., ஆட்சிக்கு, 2018ல் பா.ஜ., முடிவு கட்டியது.
மீண்டும் வெற்றி
அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிப்லப் குமார் தேப் முதல்வராக பொறுப்பேற்றார்.நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், 2023ல் திரிபுரா சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, கட்சியை பலப்படுத்தி மீண்டும் வெற்றி பெற பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை பிப்லப் குமார் தேப் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியை பலப்படுத்தும்படி இருவரும் கேட்டனர். இதையடுத்து, பிப்லப் குமார் நேற்று திரிபுரா கவர்னர் எஸ்.என். ஆர்யாவிடம் தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
பின், பா.ஜ., மேலிட பார்வையாளர்கள் பூபேந்தர் யாதவ், வினோத் தாவ்தே தலைமையில் திரிபுரா சட்டசபை பா.ஜ., தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இதில், திரிபுரா மாநில பா.ஜ., தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.,யுமான மாணிக் சாஹாவை முதல்வராக தேர்வு செய்ய, பிப்லப் குமார் பரிந்துரைத்தார்.இதற்கு, அமைச்சர் ராம்பிரசாத் பால் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.

வலியுறுத்தல்
துணை முதல்வரும், திரிபுரா அரசு குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஜிஷ்னு தேவ் வர்மாவை முதல்வராக நியமிக்க அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து பா.ஜ., மூத்த தலைவர்கள், ராம்பிரசாத் பாலை சமாதானப்படுத்தி, திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சாஹாவை தேர்வு செய்து அறிவித்தனர். அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement